தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு (30) தம்பலகாமம் தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டமானது எதிர்வரும் 04ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
இதில் கம்பஹா மாவட்ட அத்தனகல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகோதர மொழி பேசும் 25 இளைஞர் யுவதிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களுக்கும் சகோதர மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு சக வாழ்வு நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு திட்டமாக காணப்படுகிறது.
தம்பலகாமம் பகுதியில் உள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளின் வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் கலை கலாசாரம் பாரம்பரிய முறைகள் தொடர்பிலும் இதன் போது அவர்கள் புரிந்து கொள்வதன் ஊடாக சமாதானம் ஒற்றுமை போன்றன கட்டியெழுப்பப்படும் நோக்கில் ஒரு நிகழ்வாக அமையப் பெற்றுள்ளது.
இதன் முதல் நிகழ்வில் குறித்த இளைஞர் யுவதிகள் தம்பலகாமம் மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டு அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது.
இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமலையில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு.samugammedia தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு (30) தம்பலகாமம் தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டமானது எதிர்வரும் 04ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது. இதில் கம்பஹா மாவட்ட அத்தனகல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகோதர மொழி பேசும் 25 இளைஞர் யுவதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ் பேசும் மக்களுக்கும் சகோதர மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு சக வாழ்வு நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு திட்டமாக காணப்படுகிறது. தம்பலகாமம் பகுதியில் உள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளின் வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் கலை கலாசாரம் பாரம்பரிய முறைகள் தொடர்பிலும் இதன் போது அவர்கள் புரிந்து கொள்வதன் ஊடாக சமாதானம் ஒற்றுமை போன்றன கட்டியெழுப்பப்படும் நோக்கில் ஒரு நிகழ்வாக அமையப் பெற்றுள்ளது. இதன் முதல் நிகழ்வில் குறித்த இளைஞர் யுவதிகள் தம்பலகாமம் மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டு அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது.இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.