• Oct 30 2024

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை- நேற்று இரவு முதல் கனத்த மழை! samugammedia

Tamil nila / Jun 8th 2023, 3:23 pm
image

Advertisement

நேற்று மாலை முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது.

இடை இடையே பலத்த காற்று வீசுகி மண்றது. இதனால் இப் பகுதியில் பல் வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது உள்ளது இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல் வேறு வீதிகளில் போக்குவரத்து பல மணித்தியாலம் துண்டிக்கப்பட்டது.

நீரேந்துப் பகுதியான மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான,பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பெரும் தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கனத்த மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மரே ஓயா, நல்லதண்ணி ஒயா மற்றும் சிறிய ஓடைகளிளும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பண்ணையாளர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் இடி மின்னல் தோன்றும் போது கை களில் இரும்பு உலோக பொருட்கள் வைத்து இருக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மேலும் ஹட்டன் நுவரெலியா, ஹட்டன், கன்டி, மஸ்கெலியா, நோட்டன், நோட்டன், தியகல, தியகல, கினிக்கத்தேன, கினிகத்தேன, கொழும்பு வீதியில் பல இடங்களில் பணிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிசார் கேட்டுக் கொண்டனர்.


மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை- நேற்று இரவு முதல் கனத்த மழை samugammedia நேற்று மாலை முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது.இடை இடையே பலத்த காற்று வீசுகி மண்றது. இதனால் இப் பகுதியில் பல் வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது உள்ளது இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல் வேறு வீதிகளில் போக்குவரத்து பல மணித்தியாலம் துண்டிக்கப்பட்டது.நீரேந்துப் பகுதியான மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான,பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பெரும் தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கனத்த மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மரே ஓயா, நல்லதண்ணி ஒயா மற்றும் சிறிய ஓடைகளிளும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.பண்ணையாளர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் இடி மின்னல் தோன்றும் போது கை களில் இரும்பு உலோக பொருட்கள் வைத்து இருக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.மேலும் ஹட்டன் நுவரெலியா, ஹட்டன், கன்டி, மஸ்கெலியா, நோட்டன், நோட்டன், தியகல, தியகல, கினிக்கத்தேன, கினிகத்தேன, கொழும்பு வீதியில் பல இடங்களில் பணிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிசார் கேட்டுக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement