• Aug 04 2026

சீரற்ற வானிலை ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

dorin / Aug 3rd 2026, 1:51 pm
image

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. 

இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அதேநேரம் கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற வானிலை ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரம் கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement