• Oct 19 2024

நாட்டுக்கு வருமானத்தை ஈட்டும் நடவடிக்கை - கிழக்கு ஆளுநரின் விசேட வேலைத்திட்டம்..! samugammedia

Chithra / May 25th 2023, 12:14 pm
image

Advertisement

 


கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பகுதியை ஆசியாவின் அழகான கடற்கரையாகவும், தூய்மையான கடற்கரையாகவும் மாற்றும் விசேட திட்டமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்ற பிரிவுகளில் கடற்கரையை கொண்ட சகல கடற்கரைப் பகுதியும் எதிர்வரும் சனிக்கிழமை (27) ஆம் திகதி காலை 7.00 மணிக்கு சிரமதானம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டுமென சகல உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிரமதானப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரமதானம் செய்யும் தூரம், சிரமதானத்தில் கலந்து கொண்டோரின் பெயர் விபரங்கள், சிரமதானம் செய்யும் புகைப்படங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அவ் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத்துதுறையாக மாற்றி வெளிநாட்டு பயணிகளை வரவழைத்து இதன் மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையாக கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் இவ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நாட்டுக்கு வருமானத்தை ஈட்டும் நடவடிக்கை - கிழக்கு ஆளுநரின் விசேட வேலைத்திட்டம். samugammedia  கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பகுதியை ஆசியாவின் அழகான கடற்கரையாகவும், தூய்மையான கடற்கரையாகவும் மாற்றும் விசேட திட்டமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்துள்ளார்.அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்ற பிரிவுகளில் கடற்கரையை கொண்ட சகல கடற்கரைப் பகுதியும் எதிர்வரும் சனிக்கிழமை (27) ஆம் திகதி காலை 7.00 மணிக்கு சிரமதானம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டுமென சகல உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அத்தோடு அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிரமதானப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சிரமதானம் செய்யும் தூரம், சிரமதானத்தில் கலந்து கொண்டோரின் பெயர் விபரங்கள், சிரமதானம் செய்யும் புகைப்படங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட வேண்டுமென அவ் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத்துதுறையாக மாற்றி வெளிநாட்டு பயணிகளை வரவழைத்து இதன் மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையாக கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் இவ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement