நல்லூர் ஆலய வளாகத்தில் வீதி தடையினையும் மீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் உள்நுழைந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டு மாற்றுபாதைகள் ஊடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்றுவருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதித்தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனங்கள் அத்துமீறி உள்நுழைந்ததாக முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தனது முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சாதாரண பொதுமக்களின் வாகனங்களையும் நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழாவில் மங்கள வாத்தியம் மற்றும் பணிபுரியவர்களின் வாகனங்களை ஏன் அவர்களின் துவிச்சக்கர வண்டிகளை திருப்பி அனுப்புகின்ற பொலிஸாரின் அனுமதியுடன் அவர்களின் வழி துணையுடன் இவ்வாகனங்கள் அத்துமீறி உள்நுழைந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூரில் பொலிஸாரின் அசமந்த போக்கு -ஆலய வளாகத்தினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள். நல்லூர் ஆலய வளாகத்தில் வீதி தடையினையும் மீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் உள்நுழைந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டு மாற்றுபாதைகள் ஊடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்றுவருகின்றன.இவ்வாறானதொரு நிலையில், வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதித்தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனங்கள் அத்துமீறி உள்நுழைந்ததாக முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தனது முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதேவேளை, சாதாரண பொதுமக்களின் வாகனங்களையும் நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழாவில் மங்கள வாத்தியம் மற்றும் பணிபுரியவர்களின் வாகனங்களை ஏன் அவர்களின் துவிச்சக்கர வண்டிகளை திருப்பி அனுப்புகின்ற பொலிஸாரின் அனுமதியுடன் அவர்களின் வழி துணையுடன் இவ்வாகனங்கள் அத்துமீறி உள்நுழைந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.