• Feb 10 2025

Chithra / Feb 9th 2025, 1:19 pm
image


2025 ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 573 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த 2024 ஜனவரி மாத்தில் பதிவு செய்யப்பட்ட 487.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 17.5% சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து 6.57 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 5.96 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது 10.1% சதவீத அதிகமாகும்.

இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணமானது, நாட்டின் ஏற்றுமதி வருவாயைத் தவிர, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய மூலமாகும்.

வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு 2025 ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 573 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது கடந்த 2024 ஜனவரி மாத்தில் பதிவு செய்யப்பட்ட 487.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 17.5% சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து 6.57 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இது 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 5.96 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது 10.1% சதவீத அதிகமாகும்.இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணமானது, நாட்டின் ஏற்றுமதி வருவாயைத் தவிர, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய மூலமாகும்.

Advertisement

Advertisement

Advertisement