எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னர் கூறியவற்றை இப்போது செயற்படுத்த முடியாது என்பதை நிலைநிறுத்தியுள்ளது எனத் தான் எண்ணுவதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச சபைகளிலும் கதிரை சின்னத்திலேயே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட கூட்டணியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம்.
அனைவரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் நாட்டின் அனைத்து இன மக்களும் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள். என்று கூறினார்
மீண்டும் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும் சுதந்திர கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னர் கூறியவற்றை இப்போது செயற்படுத்த முடியாது என்பதை நிலைநிறுத்தியுள்ளது எனத் தான் எண்ணுவதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச சபைகளிலும் கதிரை சின்னத்திலேயே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட கூட்டணியிலேயே நாங்கள் போட்டியிடுகின்றோம்.அனைவரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் நாட்டின் அனைத்து இன மக்களும் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள். என்று கூறினார்