• Jan 22 2025

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரிப்பு

Chithra / Jan 3rd 2025, 3:46 pm
image

 



கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நாட்டின் பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 33 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுக்கு அமைவாக, அம்பாறை மாவட்டத்தில் 79%, அநுராதபுரம் மாவட்டத்தில் 95%, பதுளை மாவட்டத்தில் 71%, மட்டக்களப்பு, மொனராகலை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் 82%, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 91%, காலி, கண்டி, குருநாகல், பொலன்னறுவை, புத்தளம் மாவட்டங்கள் 98% வீதமாக பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 87.6% ஆக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது நாட்டின் சில முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், குறித்த நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நீர்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரிப்பு  கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நாட்டின் பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 33 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுக்கு அமைவாக, அம்பாறை மாவட்டத்தில் 79%, அநுராதபுரம் மாவட்டத்தில் 95%, பதுளை மாவட்டத்தில் 71%, மட்டக்களப்பு, மொனராகலை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் 82%, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 91%, காலி, கண்டி, குருநாகல், பொலன்னறுவை, புத்தளம் மாவட்டங்கள் 98% வீதமாக பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 87.6% ஆக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், தற்போது நாட்டின் சில முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், குறித்த நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நீர்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now