இலங்கையில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் கூறினார்.
இதேவேளை, பெண்களுக்கு சமமாகத் தகுதியான ஆண்கள் இல்லாதால், அவர்கள் திருமண வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் செல்வத்துடன் கூடிய பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆண்கள் கண்டுபிடிக்க இயலும் என தெரிவித்துள்ளார்.
எனினும், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் திருமணத்திற்கான ஆண்களை தேடுவதில் சிரமங்கள் உருவாகலாம் எனவும் இது நாடு முழுவதும் சமூக அமைப்பை எனவும் பேராசிரியர் மெத்ஸில தெரிவித்துள்ளார்.
மேலும், பணியிடங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பாலின சமநிலையின்மையை ஏற்படுத்தி, பல சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம்.
இது தொழிலாளர் சந்தையையும், உற்பத்தித்திறனையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.
ஆண்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட சில தொழில்களில், போதுமான ஆண் மக்கள்தொகை இல்லாவிட்டால், நாம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்,
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அமிந்த மெத்சில் வலியுறுத்தினார்.
இலங்கையில் பெண்கள் அதிகரிப்பு;ஆண்கள் எண்ணிக்கை வீழ்ச்சி; ஆபத்து தொடர்பில் எச்சரிக்கிறார் பேராசிரியர் இலங்கையில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் கூறினார்.இதேவேளை, பெண்களுக்கு சமமாகத் தகுதியான ஆண்கள் இல்லாதால், அவர்கள் திருமண வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.கல்வி மற்றும் செல்வத்துடன் கூடிய பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆண்கள் கண்டுபிடிக்க இயலும் என தெரிவித்துள்ளார்.எனினும், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் திருமணத்திற்கான ஆண்களை தேடுவதில் சிரமங்கள் உருவாகலாம் எனவும் இது நாடு முழுவதும் சமூக அமைப்பை எனவும் பேராசிரியர் மெத்ஸில தெரிவித்துள்ளார். மேலும், பணியிடங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பாலின சமநிலையின்மையை ஏற்படுத்தி, பல சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம். இது தொழிலாளர் சந்தையையும், உற்பத்தித்திறனையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். ஆண்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட சில தொழில்களில், போதுமான ஆண் மக்கள்தொகை இல்லாவிட்டால், நாம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்,இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அமிந்த மெத்சில் வலியுறுத்தினார்.