• Nov 14 2024

அதிகரித்த வேட்பாளர்களால் இம்முறை செலவு அதிகம் - தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

Chithra / Nov 13th 2024, 1:30 pm
image


இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள், ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை  தெரிவித்தார்.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் ஏற்ப வாக்குச்சீட்டுகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

கடந்த முறை 1713 ஆக இருந்த வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இம்முறை 2034 ஆக அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் தேர்தல் அலுவலகத்திற்கு கூடுதல் செலவாகும். இருப்பினும், வாக்குப்பதிவைத் தொடர்ந்து சரியான மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னரே துல்லியமான செலவு உயர்வை அறிய முடியும் என்று அவர் கூறினார். 

நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அதிகரித்த வேட்பாளர்களால் இம்முறை செலவு அதிகம் - தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட தகவல் இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள், ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை  தெரிவித்தார்.வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் ஏற்ப வாக்குச்சீட்டுகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.கடந்த முறை 1713 ஆக இருந்த வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இம்முறை 2034 ஆக அதிகரித்துள்ளது.இவை அனைத்தும் தேர்தல் அலுவலகத்திற்கு கூடுதல் செலவாகும். இருப்பினும், வாக்குப்பதிவைத் தொடர்ந்து சரியான மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னரே துல்லியமான செலவு உயர்வை அறிய முடியும் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement