• Nov 14 2024

கொலைக் குற்றச்சாட்டில் கைதான இருவர் 27 வருடங்களுக்கு பின்னர் விடுதலை

Chithra / Nov 13th 2024, 1:20 pm
image



இராஜாங்கனையில் 27 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு குளியாபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இராஜாங்கனையில் வசிக்கும் சந்தேக நபர்களான “உக்குவா” என அழைக்கப்படும் தடிகமகே பிரேமசிறி மற்றும் “கே. வசந்தா” என்றழைக்கப்படும் கே.வசந்த குமார் ஆகிய இருவரும், அரசு தரப்பினால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு  சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கு, அநுராதபுரம் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இரண்டு சந்தேக நபர்களும் குற்றத்தைச் செய்ததாக, சட்டமா அதிபரால் இலங்கை தண்டனைச் சட்டக் கட்டளைச் சட்டத்தின் 296 ஆவது பிரிவின் கீழ் அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் முதலில் விசாரிக்கப்பட்டது.

கொலைக் குற்றச்சாட்டில் கைதான இருவர் 27 வருடங்களுக்கு பின்னர் விடுதலை இராஜாங்கனையில் 27 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு குளியாபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.இராஜாங்கனையில் வசிக்கும் சந்தேக நபர்களான “உக்குவா” என அழைக்கப்படும் தடிகமகே பிரேமசிறி மற்றும் “கே. வசந்தா” என்றழைக்கப்படும் கே.வசந்த குமார் ஆகிய இருவரும், அரசு தரப்பினால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு  சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கு, அநுராதபுரம் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இரண்டு சந்தேக நபர்களும் குற்றத்தைச் செய்ததாக, சட்டமா அதிபரால் இலங்கை தண்டனைச் சட்டக் கட்டளைச் சட்டத்தின் 296 ஆவது பிரிவின் கீழ் அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் முதலில் விசாரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement