நாட்டில் தற்போது நான்கு சூதாட்ட நிலையங்கள் (கெசினோ) உள்ளன. மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடங்களிலேயே இவ்வாறான நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அந்த முறைமை உலகில் எங்குமில்லை எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டியில் தலதாமாளிகையை வணங்கிவிட்டு, சூதாட முடியுமா? என்றும் வினவினார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி ஆகிய இடங்களிலேயே இவ்வாறு கெசினோ நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன.
கொழும்பில், தாமரை கோபுரத்தில் நிறுவப்படவுள்ளது. அவற்றை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்களுக்கே வழங்கப்படவுள்ளன.
அப்படியாயின், இந்தியா, சீனா நபர்களின் பெயர்கள் என்ன? அவர்களின் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்றும் கேள்வியெழுப்பினார்.
இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,
இலங்கையர்கள் பங்குப்பற்ற முடியாத அளவுக்கு கெசினோவுக்கான சட்டங்களில் திருத்தங்கள் உள்ளன.
கெசினோவுக்குள் உள்நுழையும் போது, 200 அமெரிக்க டொலர்கள் கையிலிருக்க வேண்டும்.
அந்த கெசினோக்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என்றடிப்படையில் கெசினோக்கள் ஆரம்பிக்கப்படும்.
தற்போது 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அனைவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றார்.
அதிகரித்த சூதாட்ட நிலையங்கள். தலதாமாளிகையை வணங்கிவிட்டு சூதாட முடியுமா சபையில் கேள்வியெழுப்பிய தேரர் நாட்டில் தற்போது நான்கு சூதாட்ட நிலையங்கள் (கெசினோ) உள்ளன. மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடங்களிலேயே இவ்வாறான நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அந்த முறைமை உலகில் எங்குமில்லை எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டியில் தலதாமாளிகையை வணங்கிவிட்டு, சூதாட முடியுமா என்றும் வினவினார்.பாராளுமன்றத்தில் இன்று (10) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி ஆகிய இடங்களிலேயே இவ்வாறு கெசினோ நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன. கொழும்பில், தாமரை கோபுரத்தில் நிறுவப்படவுள்ளது. அவற்றை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்களுக்கே வழங்கப்படவுள்ளன.அப்படியாயின், இந்தியா, சீனா நபர்களின் பெயர்கள் என்ன அவர்களின் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்றும் கேள்வியெழுப்பினார்.இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இலங்கையர்கள் பங்குப்பற்ற முடியாத அளவுக்கு கெசினோவுக்கான சட்டங்களில் திருத்தங்கள் உள்ளன.கெசினோவுக்குள் உள்நுழையும் போது, 200 அமெரிக்க டொலர்கள் கையிலிருக்க வேண்டும்.அந்த கெசினோக்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என்றடிப்படையில் கெசினோக்கள் ஆரம்பிக்கப்படும். தற்போது 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அனைவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றார்.