• Nov 23 2024

நாட்டில் அதிகரித்த அரிசியின் விலை

Chithra / Sep 9th 2024, 3:08 pm
image

  

அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், 

முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக கிட்டத்தட்ட 36 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன, 

ஆனால் இதுவரை விவசாயிகள் 1,00,000 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்துள்ளதாக சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, தனியார் துறையினர் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்,

இதனால் கிரிசம்பா நெல்லின் விலை 105 - 110க்கு இடையில் இருந்ததாகவும் தற்போது 130 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்த அரிசியின் விலை   அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக கிட்டத்தட்ட 36 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை விவசாயிகள் 1,00,000 மெற்றிக் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்துள்ளதாக சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.எவ்வாறாயினும், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, தனியார் துறையினர் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்,இதனால் கிரிசம்பா நெல்லின் விலை 105 - 110க்கு இடையில் இருந்ததாகவும் தற்போது 130 ரூபாவை தாண்டியுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement