• Feb 27 2026

மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்; ஆபத்தில் பல உயிர்கள்

Chithra / Feb 26th 2026, 11:05 am
image

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த வடகீழ் பருவப்பெயற்சி மழைவீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம் ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.


கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு.


எனவே இதனைக் கருத்திற்கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்பதற்காகச் செல்பவர்களும், தமது கால்நடைகள் விடயத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 


மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்; ஆபத்தில் பல உயிர்கள்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த வடகீழ் பருவப்பெயற்சி மழைவீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம் ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு.எனவே இதனைக் கருத்திற்கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்பதற்காகச் செல்பவர்களும், தமது கால்நடைகள் விடயத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement