• Dec 18 2024

சுதந்திர தின கொண்டாட்டங்கள் - கடுமையாக பாதிக்கப்பட்ட கொழும்பு மக்கள்..!

Chithra / Feb 2nd 2024, 12:59 pm
image

 

கொழும்பு - கொள்ளுப்பிட்டிய பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது ஒத்திகை நடவடிக்கைள் நடைபெற்று வருகின்றன.

இதனால் காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

 இதற்கான மாற்றுவழிகளை காவல்துறையினர் அமைத்து கொடுத்த போதும் தற்போது ஒரு சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதுடன் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், சுதந்திர தின கொண்டாட்கள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து நெரிசல் நிலை தொடருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் - கடுமையாக பாதிக்கப்பட்ட கொழும்பு மக்கள்.  கொழும்பு - கொள்ளுப்பிட்டிய பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சுதந்திர தின நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலி முகத்திடலில் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது ஒத்திகை நடவடிக்கைள் நடைபெற்று வருகின்றன.இதனால் காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுவழிகளை காவல்துறையினர் அமைத்து கொடுத்த போதும் தற்போது ஒரு சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதுடன் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.மேலும், சுதந்திர தின கொண்டாட்கள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து நெரிசல் நிலை தொடருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement