• May 20 2024

இந்திய - இலங்கை இணைந்த டிஜிட்டல் அடையாள திட்டம்! - இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Jun 28th 2023, 7:20 am
image

Advertisement

இந்தியா மற்றும்  இலங்கை இணைந்த திட்டமான இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றின் நான்காவது கூட்டத்தொடருக்கான தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சு ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற போது அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நபர்களின் சுய விபரங்கள் உயிரியளவியல் தகவல்களை பெற்று மத்திய அமைப்புக்குள் உள்வாங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

இந்நிலையில் பிரஜைகளின் பிறப்புச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இது தொடர்பான பிரேரணை உள்வாங்கப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் பலவீனம் காரணமாக அது தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாமதங்களையும் பின்னடவைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச் செல்லும் வகையில் செயற்படுமாறு குழு அறிவுறுத்தியது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சமன்பிரிய ஹேரத், வீரசுமன வீரசிங்க மற்றும குணதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்திய - இலங்கை இணைந்த டிஜிட்டல் அடையாள திட்டம் - இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia இந்தியா மற்றும்  இலங்கை இணைந்த திட்டமான இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.ஒன்பதாவது நாடாளுமன்றின் நான்காவது கூட்டத்தொடருக்கான தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சு ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற போது அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நபர்களின் சுய விபரங்கள் உயிரியளவியல் தகவல்களை பெற்று மத்திய அமைப்புக்குள் உள்வாங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் பிரஜைகளின் பிறப்புச் சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பான பிரேரணை உள்வாங்கப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் பலவீனம் காரணமாக அது தடைப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தாமதங்களையும் பின்னடவைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச் செல்லும் வகையில் செயற்படுமாறு குழு அறிவுறுத்தியது.இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சமன்பிரிய ஹேரத், வீரசுமன வீரசிங்க மற்றும குணதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement