• Jan 13 2025

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் - சந்தோஷ் ஜா

Tharmini / Jan 7th 2025, 11:46 am
image

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவை இந்தியா வழங்குவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே இடையில் நடந்த சந்திப்பில் இந்த உறுதியளிப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்திய உயர்ஸ்தானிகர், கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று கூறினார். மேலும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இலக்கையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில், இலங்கையின் இளைஞர் விவகாரத் துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் - சந்தோஷ் ஜா இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவை இந்தியா வழங்குவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.இந் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே இடையில் நடந்த சந்திப்பில் இந்த உறுதியளிப்பு வழங்கப்பட்டது.மேலும் இந்திய உயர்ஸ்தானிகர், கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று கூறினார். மேலும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இலக்கையும் அவர் வலியுறுத்தினார்.இந்த சந்திப்பில், இலங்கையின் இளைஞர் விவகாரத் துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement