• Nov 19 2024

தென்னாப்பிரிக்க தொடரை வென்ற இந்தியா

Tharmini / Nov 16th 2024, 10:25 am
image

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.  

மேலும் தென் ஆபிரிக்காவுக்கு (SA) எதிரான நான்காவது ரி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களைக் எடுத்தது.

இதையடுத்து, 284 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆபிரிக்கா அணி களமிறங்கியது.

இறுதியில், தென் ஆபிரிக்கா 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் இந்திய அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ரி20 தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) மற்றும் திலக் வர்மா (Tilak Varma) அடித்த சதமானது இதற்கு முன் எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையாக உள்ளது.

இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு நேர உறுப்பினராக இருக்கும் எந்த ஒரு அணியும் ஒரே ரி 20 இன்னிங்ஸில் இரண்டு சதங்களை அடித்ததில்லை.

முதன் முறையாக இந்திய அணி அந்த சாதனையை படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்காவது ரி20 போட்டியில் ஒரே இன்னிங்ஸில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தினர்.

அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் சேர்த்தனர்.அதுவே சர்வதேச ரி20 போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய கூட்டணி ஆகும்.

இந்த போட்டியில் இந்திய அணி சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை செய்தது.

இந்த ஒரே போட்டியில் இந்திய அணி 23 சிக்ஸர்களை அடித்து இருந்தது. சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ், அபிஷேக் சர்மா 4 சிக்ஸ், திலக் வர்மா 10 சிக்ஸ் அடித்து இருந்தனர்.

இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்திருந்தார்கள்.

இதன் மூலம் இந்திய அணி ஒரே ஆண்டில் ஏழு சதங்கள் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் சதம் அடித்து இருந்தனர். சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் சதம் அடித்திருந்தார்.

அதன் பின் தென்னாபிரிக்க ரி20 தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்து உள்ளனர்.

சஞ்சு சாம்சன் ஒரே ஆண்டில் சர்வதேச ரி 20 போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 283 ஓட்டங்கள் எடுத்தது. இதுவே இந்திய அணியின் இரண்டாவது மிகப்பெரிய ரி20 புள்ளிகள் ஆகும். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக 297 ஓட்டங்கள் எடுத்திருந்ததே இந்தியாவின் அதிகபட்ச புள்ளிகள் ஆகும்.

மேலும், இதுவே தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியின் அதிகப்பட்ச புள்ளிகள் ஆகும்.

வெளிநாட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய புள்ளிகளாகவும்இது அமைந்தது.

தென்னாப்பிரிக்க தொடரை வென்ற இந்தியா தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.  மேலும் தென் ஆபிரிக்காவுக்கு (SA) எதிரான நான்காவது ரி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களைக் எடுத்தது.இதையடுத்து, 284 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆபிரிக்கா அணி களமிறங்கியது.இறுதியில், தென் ஆபிரிக்கா 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இதன்மூலம் இந்திய அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ரி20 தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) மற்றும் திலக் வர்மா (Tilak Varma) அடித்த சதமானது இதற்கு முன் எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையாக உள்ளது.இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு நேர உறுப்பினராக இருக்கும் எந்த ஒரு அணியும் ஒரே ரி 20 இன்னிங்ஸில் இரண்டு சதங்களை அடித்ததில்லை.முதன் முறையாக இந்திய அணி அந்த சாதனையை படைத்துள்ளது.தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்காவது ரி20 போட்டியில் ஒரே இன்னிங்ஸில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தினர்.அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 210 ஓட்டங்கள் சேர்த்தனர்.அதுவே சர்வதேச ரி20 போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய கூட்டணி ஆகும்.இந்த போட்டியில் இந்திய அணி சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை செய்தது.இந்த ஒரே போட்டியில் இந்திய அணி 23 சிக்ஸர்களை அடித்து இருந்தது. சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ், அபிஷேக் சர்மா 4 சிக்ஸ், திலக் வர்மா 10 சிக்ஸ் அடித்து இருந்தனர்.இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்திருந்தார்கள்.இதன் மூலம் இந்திய அணி ஒரே ஆண்டில் ஏழு சதங்கள் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளது.இந்த ஆண்டின் துவக்கத்தில் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் சதம் அடித்து இருந்தனர். சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் சதம் அடித்திருந்தார்.அதன் பின் தென்னாபிரிக்க ரி20 தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு முறையும், திலக் வர்மா இரண்டு முறையும் சதம் அடித்து உள்ளனர்.சஞ்சு சாம்சன் ஒரே ஆண்டில் சர்வதேச ரி 20 போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 283 ஓட்டங்கள் எடுத்தது. இதுவே இந்திய அணியின் இரண்டாவது மிகப்பெரிய ரி20 புள்ளிகள் ஆகும். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக 297 ஓட்டங்கள் எடுத்திருந்ததே இந்தியாவின் அதிகபட்ச புள்ளிகள் ஆகும்.மேலும், இதுவே தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியின் அதிகப்பட்ச புள்ளிகள் ஆகும்.வெளிநாட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய புள்ளிகளாகவும்இது அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement