• Apr 03 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய துணைத்தூதுவர்!

Tamil nila / Dec 7th 2024, 10:53 pm
image

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அவர்கள் அண்மையில் இலங்கையில் உள்ள இந்தியா உயரஸ்தானிகர் அவர்களை சந்தித்து  பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க


முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 426 பயனாளிகளில் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 138 பயனாளிகளுக்கும் மாந்தை கிழக்கு பிரதேசச் செயலக பிரிவிற்குட்பட்ட 288 பயனாளிகளுக்கும்  முதற்கட்ட மாக இன்று  இந்திய அரசாங்கத்தின் இந்தியா மக்களின் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி உட்பட யாழ் இந்திய துணை தூதரக அதிகாரி மற்றும்  பிரதேச செயலாளர் உட்பட குறித்த பகுதி கிராம சேவையாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்  உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் 


நிகழ்வில் உரையாற்றிய துணைத்தூதர் வடக்கு கிழக்கு மக்களுக்கான குறிப்பாக தமிழ் மக்களின் நண்பனான இந்திய அரசு அன்றும் இன்றும்  எப்போதும் இருக்கும் என தெரிவித்திருந்தார்.




வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய துணைத்தூதுவர் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அவர்கள் அண்மையில் இலங்கையில் உள்ள இந்தியா உயரஸ்தானிகர் அவர்களை சந்தித்து  பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்கமுல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 426 பயனாளிகளில் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 138 பயனாளிகளுக்கும் மாந்தை கிழக்கு பிரதேசச் செயலக பிரிவிற்குட்பட்ட 288 பயனாளிகளுக்கும்  முதற்கட்ட மாக இன்று  இந்திய அரசாங்கத்தின் இந்தியா மக்களின் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி உட்பட யாழ் இந்திய துணை தூதரக அதிகாரி மற்றும்  பிரதேச செயலாளர் உட்பட குறித்த பகுதி கிராம சேவையாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்  உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் நிகழ்வில் உரையாற்றிய துணைத்தூதர் வடக்கு கிழக்கு மக்களுக்கான குறிப்பாக தமிழ் மக்களின் நண்பனான இந்திய அரசு அன்றும் இன்றும்  எப்போதும் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement