• Nov 19 2024

ஓரணியில் நின்று தமிழர் வாக்குகளை பலப்படுத்தி பேரம் பேசு சக்தியாக மாறுங்கள் - கூட்டமைப்புக்கு இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோசனை!

Tamil nila / Jul 12th 2024, 11:21 pm
image

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாலை  கொழும்பில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் கோவிந்தன் கருணாகரன்,வினோ நாகலிங்கம், புளொட் சார்பில் பவன், ஐனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் ,EPLRF கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோர்  கலந்து கொண்டார்.

குறித்த சந்திப்பில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, அரசியல் பொருளாதார பிரச்சினைகள்,பற்றி முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அதாவது ஐனாதிபதி தேர்தல்,  பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கூறப்பட்டது.மேலும் நில அபகரிப்பு,  மீனவர்கள் பிரச்சனை கூறப்பட்டது

மாகணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வட கிழக்குபகுதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் சம்மந்தமாகவும் எடுத்துரைக்கபட்டது. 

இந்திய தூதுவர் பதிலளிக்கையில்,  வடபகுதியில் கிழக்குமாகாண பகுதியில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைதிட்டங்கள்  தொடர்ந்தும் நடைபெறும் எனவும் கூறப்பட்டது

வடபகுதி மீனவர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் ஊடாக அவர்களுக்கான கடற்தொழில் உபகரணங்கள் நிவாரணங்கள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

2005 ஆண்டுக்கு பின்னர் தமிழர் தரப்புக்கு பேரம்பேசக்கூடிய ஒரு களமாக இந்த ஐனாதிபதி தேர்தல் சந்தர்ப்பமாக இருப்பதாகவும் இதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் எல்லாக்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழர்தரப்பு வாக்குக்களை பயன்படுத்தி ஒரு உடன்படிக்கை செய்து தமிழர்பிரச்சனை தீர்ப்பதற்கு முயற்ச்சிக்கலாம் எனவும் குறித்த சந்திப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஓரணியில் நின்று தமிழர் வாக்குகளை பலப்படுத்தி பேரம் பேசு சக்தியாக மாறுங்கள் - கூட்டமைப்புக்கு இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோசனை இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாலை  கொழும்பில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் கோவிந்தன் கருணாகரன்,வினோ நாகலிங்கம், புளொட் சார்பில் பவன், ஐனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் ,EPLRF கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோர்  கலந்து கொண்டார்.குறித்த சந்திப்பில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, அரசியல் பொருளாதார பிரச்சினைகள்,பற்றி முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.அதாவது ஐனாதிபதி தேர்தல்,  பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கூறப்பட்டது.மேலும் நில அபகரிப்பு,  மீனவர்கள் பிரச்சனை கூறப்பட்டதுமாகணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வட கிழக்குபகுதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் சம்மந்தமாகவும் எடுத்துரைக்கபட்டது. இந்திய தூதுவர் பதிலளிக்கையில்,  வடபகுதியில் கிழக்குமாகாண பகுதியில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைதிட்டங்கள்  தொடர்ந்தும் நடைபெறும் எனவும் கூறப்பட்டதுவடபகுதி மீனவர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் ஊடாக அவர்களுக்கான கடற்தொழில் உபகரணங்கள் நிவாரணங்கள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.2005 ஆண்டுக்கு பின்னர் தமிழர் தரப்புக்கு பேரம்பேசக்கூடிய ஒரு களமாக இந்த ஐனாதிபதி தேர்தல் சந்தர்ப்பமாக இருப்பதாகவும் இதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் எல்லாக்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழர்தரப்பு வாக்குக்களை பயன்படுத்தி ஒரு உடன்படிக்கை செய்து தமிழர்பிரச்சனை தீர்ப்பதற்கு முயற்ச்சிக்கலாம் எனவும் குறித்த சந்திப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement