இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று(22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது, வட கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது.
இந்தியக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டதுடன், திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்- ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று(22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.இதன்போது, வட கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதன்படி, இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது.இந்தியக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டதுடன், திட்டங்களை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.