• Nov 17 2024

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்- பிரதமர் தினேஷ் கொழும்பில் திடீர் சந்திப்பு..!

Sharmi / Aug 30th 2024, 11:05 am
image

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்றையதினம்(29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில்,  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளில் பூரணத்துவம் என்ற அம்சத்தை கருத்தில் கொண்டு இது பரஸ்பர நலனுக்கானது என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாகவும், முன்னுரிமைத் தேவைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார் துறையின் பங்களிப்பை இலகுபடுத்தும் வகையில் இலங்கை மின்சார சபை விதிமுறைகளை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் தேரவாத பொருளாதாரக் கொள்கையானது 25 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரின் காலத்தில் இந்தியாவில் இருந்த பொருளாதார நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அது பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்றும் பிரதமர் குணவர்தன தெரிவித்தார்.

மேலும் ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி அளித்ததற்காக இந்தியாவிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்- பிரதமர் தினேஷ் கொழும்பில் திடீர் சந்திப்பு. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்றையதினம்(29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.குறித்த சந்திப்பில்,  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளில் பூரணத்துவம் என்ற அம்சத்தை கருத்தில் கொண்டு இது பரஸ்பர நலனுக்கானது என்றும் தெரிவித்தார்.அதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாகவும், முன்னுரிமைத் தேவைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கருத்துக்களை கேட்டறிந்தார்.இந்த சந்திப்பின் போது, ​​பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார் துறையின் பங்களிப்பை இலகுபடுத்தும் வகையில் இலங்கை மின்சார சபை விதிமுறைகளை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.இலங்கையின் தேரவாத பொருளாதாரக் கொள்கையானது 25 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரின் காலத்தில் இந்தியாவில் இருந்த பொருளாதார நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அது பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்றும் பிரதமர் குணவர்தன தெரிவித்தார்.மேலும் ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி அளித்ததற்காக இந்தியாவிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement