• May 09 2024

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற இந்தியர்கள்- இந்தோனேசியாவில் கைது!

Tamil nila / Jan 20th 2023, 6:11 pm
image

Advertisement

இந்தோனேசியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 6 இந்தியர்களையும் 4 படகுப் பணியாளர்களையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் இந்தோனேசியாவுக்கே  திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.


ஆஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட இவர்களை இந்தோனேசியாவின் ரோட்டி தீவு காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 



ஆஸ்திரேலிய ஊடகத்தின் செய்தியின்படி, ஆஸ்திரேலியாவின் ஆஷ்மோர் தீவுகள் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் ஆஸ்திரேலிய கடற்படையின் ரோந்து கப்பலில் நான்கு நாட்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். பின்னர் புதிய கப்பல் ஒன்றில் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். 


ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பான Broome-க்கு வடக்கே 600 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆஷ்மோர் தீவு ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களற்ற தீவாகும். 



முன்னதாக, கடந்த டிசம்பர் 2022ல் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணத்தில் இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக சென்ற 13 ஈராக் நாட்டவர்கள் மீண்டும் இந்தோனேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். 



கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய 


அரசு, கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் எனத் தொடர்ந்து 


எச்சரிக்கை விடுத்து வருகிறது. 



கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் படகு வழியாக வரும் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை இருந்தது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்த ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி தாராளவாத ஆட்சிக் காலத்தில் நடந்தது போல் படகு வழியாக வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை தொடரும் என எச்சரித்து அவ்வாறு வருபவர்களை நாடு கடத்தி வருகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற இந்தியர்கள்- இந்தோனேசியாவில் கைது இந்தோனேசியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 6 இந்தியர்களையும் 4 படகுப் பணியாளர்களையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் இந்தோனேசியாவுக்கே  திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.ஆஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட இவர்களை இந்தோனேசியாவின் ரோட்டி தீவு காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய ஊடகத்தின் செய்தியின்படி, ஆஸ்திரேலியாவின் ஆஷ்மோர் தீவுகள் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் ஆஸ்திரேலிய கடற்படையின் ரோந்து கப்பலில் நான்கு நாட்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். பின்னர் புதிய கப்பல் ஒன்றில் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பான Broome-க்கு வடக்கே 600 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஆஷ்மோர் தீவு ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களற்ற தீவாகும். முன்னதாக, கடந்த டிசம்பர் 2022ல் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணத்தில் இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக சென்ற 13 ஈராக் நாட்டவர்கள் மீண்டும் இந்தோனேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் படகு வழியாக வரும் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை இருந்தது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்த ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி தாராளவாத ஆட்சிக் காலத்தில் நடந்தது போல் படகு வழியாக வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை தொடரும் என எச்சரித்து அவ்வாறு வருபவர்களை நாடு கடத்தி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement