• Apr 27 2024

பிரதமர் மோடி தொடர்பான இங்கிலாந்து எம்.பியின் கேள்வி- வாயை அடைத்த ரிஷி சுனக்!

Tamil nila / Jan 20th 2023, 6:30 pm
image

Advertisement

2002 கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்பாக கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் வம்சாவளி எம்பியின் வாயை அடைத்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்த விவகாரம் தொடர்பாக பேசிய ரிஷி சுனக், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப்படத் தொடரின் கருத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.  


இந்தியாவில், கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின்போது, மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்ட பிபிசி செய்தி ஊடகப் பிரிவு ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது.


இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து, இது சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசைன், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.



'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான ஆவணப்படம் தொடர்பாக பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் சுனக், "இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது என்பதை பதிவு செய்கிறேன். இந்த கருத்து நீண்டகாலமாக தொடரும் கருத்து, இதில் எந்தவித மாற்றமுமில்லை, நிச்சயமாக, துன்புறுத்தல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை இங்கிலாந்து பொறுத்துக்கொள்ளாது. ஆனால் மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அர்த்தமில்லை" என்று கூறினார்.



பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, காலனியாதிக்க மனோபாவத்துடன் ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது..


இது குறித்து கண்டனங்களைத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பக்க சார்பான இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.



முன்னதாக, குஜராத்தில் நடைபெற்ற 2002 கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய உச்ச நீதிமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி தவறு எதையும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்து, அவரை வழக்குகளில் இருந்து விடுவித்தது.


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்ததைப் போன்றே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல இங்கிலாந்து குடிமக்கள் பிபிசியின் ஆவணத் தொடருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். "பிபிசி ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பெரும் காயத்தை ஏற்படுத்தியது"  என்று பிபிசியின் பக்கச்சார்பான அறிக்கையை கண்டித்து பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றானர்.


“ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய காவல்துறை மற்றும் இந்திய நீதித்துறையை அவமதிக்கும் ஆவணப்படம் இது.... கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகளை கண்டிப்பது போலவே பாரபட்சமான பிபிசியின் அறிக்கையை கண்டிக்கிறோம்" என்பதே இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது.  

பிரதமர் மோடி தொடர்பான இங்கிலாந்து எம்.பியின் கேள்வி- வாயை அடைத்த ரிஷி சுனக் 2002 கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்பாக கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் வம்சாவளி எம்பியின் வாயை அடைத்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்த விவகாரம் தொடர்பாக பேசிய ரிஷி சுனக், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப்படத் தொடரின் கருத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.  இந்தியாவில், கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின்போது, மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்ட பிபிசி செய்தி ஊடகப் பிரிவு ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது.இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து, இது சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசைன், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான ஆவணப்படம் தொடர்பாக பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் சுனக், "இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது என்பதை பதிவு செய்கிறேன். இந்த கருத்து நீண்டகாலமாக தொடரும் கருத்து, இதில் எந்தவித மாற்றமுமில்லை, நிச்சயமாக, துன்புறுத்தல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை இங்கிலாந்து பொறுத்துக்கொள்ளாது. ஆனால் மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அர்த்தமில்லை" என்று கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, காலனியாதிக்க மனோபாவத்துடன் ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கண்டனங்களைத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பக்க சார்பான இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.முன்னதாக, குஜராத்தில் நடைபெற்ற 2002 கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய உச்ச நீதிமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி தவறு எதையும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்து, அவரை வழக்குகளில் இருந்து விடுவித்தது.இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்ததைப் போன்றே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல இங்கிலாந்து குடிமக்கள் பிபிசியின் ஆவணத் தொடருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். "பிபிசி ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பெரும் காயத்தை ஏற்படுத்தியது"  என்று பிபிசியின் பக்கச்சார்பான அறிக்கையை கண்டித்து பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றானர்.“ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய காவல்துறை மற்றும் இந்திய நீதித்துறையை அவமதிக்கும் ஆவணப்படம் இது. கலவரங்கள் மற்றும் உயிரிழப்புகளை கண்டிப்பது போலவே பாரபட்சமான பிபிசியின் அறிக்கையை கண்டிக்கிறோம்" என்பதே இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது.  

Advertisement

Advertisement

Advertisement