• Sep 06 2026

தலைமன்னார் கடலில் அத்துமீறிய இந்திய விசைப்படகுகள் – பல இலட்சம் பெறுமதியான வலைகள் சேதம்

Chithra / Sep 6th 2026, 1:43 pm
image


தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இந்தச் சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான சுமார் ரூ.6 இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், சில வலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இலங்கை கடற்பரப்பில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடியைத் தடுக்கவும், தமது மீன்பிடி உபகரணங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தலைமன்னார் கடலில் அத்துமீறிய இந்திய விசைப்படகுகள் – பல இலட்சம் பெறுமதியான வலைகள் சேதம் தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான சுமார் ரூ.6 இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், சில வலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய விசைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இலங்கை கடற்பரப்பில் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடியைத் தடுக்கவும், தமது மீன்பிடி உபகரணங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement