• Nov 28 2024

இந்தியாவில் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை..!!

Tamil nila / Mar 6th 2024, 9:14 pm
image

இந்தியாவின்  நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக நீருக்கடியில் மெட்ரோ ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் மூன்று நிலத்தடியில் உள்ளன.

இந்த சேவையானது 4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது

மெட்ரோ 520 மீ ஆற்றை வெறும் 45 வினாடிகளில் கடந்து செல்கிறது,  இது விரைவான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை உறுதியளிக்கிறது.

இதற்காக 4,965 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை. இந்தியாவின்  நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.குறிப்பாக நீருக்கடியில் மெட்ரோ ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் மூன்று நிலத்தடியில் உள்ளன.இந்த சேவையானது 4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதுமெட்ரோ 520 மீ ஆற்றை வெறும் 45 வினாடிகளில் கடந்து செல்கிறது,  இது விரைவான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை உறுதியளிக்கிறது.இதற்காக 4,965 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement