• Nov 23 2024

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா காலமானார்

Chithra / Oct 10th 2024, 7:24 am
image

 

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார்.


மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் தனது 86ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.


ரத்தன் டாடா  1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், ஒக்டோபர் 2016 முதல் பெப்ரவரி 2017 வரை இடைக்காலத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.


2008 ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது பெற்ற பிறகு, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதையும் பெற்றுக்ககொண்டார்.


ரத்தன் டாடாவின் பதவிக்காலத்தில் டாடா குழுமம் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.


டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டுகள் அவர்  இருந்து, கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார்.


1996இல் டாடா டெலி சர்வீஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தார்.


இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் வரலாற்றை பதிவுசெய்த தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவராவார்.


டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் என்ற பெருமையை இவர் தனதாக்கியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா காலமானார்  இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார்.மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் தனது 86ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.ரத்தன் டாடா  1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், ஒக்டோபர் 2016 முதல் பெப்ரவரி 2017 வரை இடைக்காலத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.2008 ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது பெற்ற பிறகு, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதையும் பெற்றுக்ககொண்டார்.ரத்தன் டாடாவின் பதவிக்காலத்தில் டாடா குழுமம் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டுகள் அவர்  இருந்து, கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார்.1996இல் டாடா டெலி சர்வீஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தார்.இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் வரலாற்றை பதிவுசெய்த தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவராவார்.டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் என்ற பெருமையை இவர் தனதாக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement