உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தீர்மானிக்கப்படஉள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல் ஏ. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 5ம் திகதி கூடியதன் பின்னர் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் குறிப்பிடடுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவிருந்தது.
எனினும், போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
எவ்வாறெனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் வெளியான தகவல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தீர்மானிக்கப்படஉள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல் ஏ. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.இந்த தீர்ப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் எதிர்வரும் 5ம் திகதி கூடியதன் பின்னர் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் குறிப்பிடடுள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவிருந்தது.எனினும், போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.எவ்வாறெனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.