• Nov 23 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி..!

Chithra / Jan 30th 2024, 4:58 pm
image

 

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (30)  நடைபெறும்   ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியின்போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் பொலிஸார் பல முறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தினர்.

வட் வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்ப்புப் பேரணியானது நகரசபை மண்டபத்திலிருந்து முன்னோக்கி சென்ற நிலையில், பொது நூலகத்திற்கு முன்பாக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியும், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களைக் கொண்டும் பேரணியை முன்னோக்கி நகராமல் தடுக்க முற்பட்டனர்.

எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டபோது, பாதுகாப்புத் தரப்பினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி.  கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (30)  நடைபெறும்   ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியின்போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் பொலிஸார் பல முறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தினர்.வட் வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.எதிர்ப்புப் பேரணியானது நகரசபை மண்டபத்திலிருந்து முன்னோக்கி சென்ற நிலையில், பொது நூலகத்திற்கு முன்பாக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியும், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களைக் கொண்டும் பேரணியை முன்னோக்கி நகராமல் தடுக்க முற்பட்டனர்.எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டபோது, பாதுகாப்புத் தரப்பினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement