மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவருகிறது.
இம் முறை இப் பகுதியில் உள்ள காசல்ரீ, மவுசாகல மற்றும் கென்யோன் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டாத காரணத்தால் தற்போது நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்த நிலையில் உள்ளது.
அதே போல் கென்யோன் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 28 அடி மட்டுமே நீர் உள்ளது காசல்ரீ நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் குறைந்த நிலையில் உள்ளது.
நாளாந்தம் நாட்டின் மின்சார தேவைக்கு ஏற்ப நீர் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர் தேக்கங்களின் நீரை பாவிப்பதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்த இரண்டு நீர் தேக்கங்களின் சேமிக்கப்பட்ட நீர் மூலம் கென்யோன், லக்சபான,பொல்பிட்டிய,நவலக்சபான, விமலசுரேந்திர ,கலுகல ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் 24 மணி நேரமும் நீர் மின் உற்பத்தி இடம் பெற்று வருகிறது .
கடுமையான வெப்பம். மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு. மத்திய மலை நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவருகிறது.இம் முறை இப் பகுதியில் உள்ள காசல்ரீ, மவுசாகல மற்றும் கென்யோன் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டாத காரணத்தால் தற்போது நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்த நிலையில் உள்ளது.அதே போல் கென்யோன் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 28 அடி மட்டுமே நீர் உள்ளது காசல்ரீ நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் குறைந்த நிலையில் உள்ளது.நாளாந்தம் நாட்டின் மின்சார தேவைக்கு ஏற்ப நீர் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர் தேக்கங்களின் நீரை பாவிப்பதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.இந்த இரண்டு நீர் தேக்கங்களின் சேமிக்கப்பட்ட நீர் மூலம் கென்யோன், லக்சபான,பொல்பிட்டிய,நவலக்சபான, விமலசுரேந்திர ,கலுகல ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் 24 மணி நேரமும் நீர் மின் உற்பத்தி இடம் பெற்று வருகிறது .