• Nov 27 2024

தீவிரமடையும் டெங்கு தாக்கம்...!ஐயாயிரத்தை தாண்டிய நோயாளர்கள்...! சுகாதார தரப்பு நடவடிக்கை...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 10:17 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக அண்மைய நாட்களாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் ஏராளமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அண்மைய நாட்களில் கொழும்பு  மற்றும் யாழில் டெங்கு நோயால் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

அவர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளதுடன் அவர்களில், 1,228 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் டெங்கு தாக்கம்.ஐயாயிரத்தை தாண்டிய நோயாளர்கள். சுகாதார தரப்பு நடவடிக்கை.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக அண்மைய நாட்களாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் ஏராளமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, அண்மைய நாட்களில் கொழும்பு  மற்றும் யாழில் டெங்கு நோயால் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது.இவ்வாறானதொரு நிலையில், இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.அவர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளதுடன் அவர்களில், 1,228 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement