• Nov 15 2024

தென்னை மரங்களில் தீவிரமடையும் வெண்நிற ஈ தாக்கம்...! சம்பூர் தென்னை செய்கையாளர்கள் கவலை...!

Sharmi / May 29th 2024, 9:36 am
image

திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சம்பூர் பிரதேச தென்னை செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் தமது தென்னை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றன.

இவ்வாறு வெண்நிற தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நோய் தாக்கம் அதிகரிக்குமாக இருந்தால் தேங்காய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் எனவும் சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு , அதற்குரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் சம்பூர் பகுதி தென்னை செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தென்னை மரங்களில் தீவிரமடையும் வெண்நிற ஈ தாக்கம். சம்பூர் தென்னை செய்கையாளர்கள் கவலை. திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சம்பூர் பிரதேச தென்னை செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.சம்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான தென்னை மரங்கள் வெண்நிற ஈ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் தமது தென்னை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றன.இவ்வாறு வெண்நிற தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது.இந்நோய் தாக்கம் அதிகரிக்குமாக இருந்தால் தேங்காய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் எனவும் சம்பூர் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு , அதற்குரிய ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் சம்பூர் பகுதி தென்னை செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement