• Nov 22 2024

உயர்ந்தது இலங்கை ரூபாயின் மதிப்பு - பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவும் குறையும்! அமைச்சர் அறிவிப்பு

Chithra / May 29th 2024, 9:39 am
image

 

ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு உயர்வால் பணவீக்கம் குறையும், ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவும் குறையும், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது எளிதாகும் என்றார்.

இது உலகளவில் நாட்டின் நிதி பலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.


உயர்ந்தது இலங்கை ரூபாயின் மதிப்பு - பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவும் குறையும் அமைச்சர் அறிவிப்பு  ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ரூபாய் மதிப்பு உயர்வால் பணவீக்கம் குறையும், ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவும் குறையும், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது எளிதாகும் என்றார்.இது உலகளவில் நாட்டின் நிதி பலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement