இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைந்துள்ள ‘ராம் மந்திர்’ ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பில் அனைத்துலக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரசித்திபெற்ற ‘கௌரவ வாள்’ (Sword of Honour) விருது வழங்கப்பட்டிருப்பதை அதன் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரிப்பேந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தினார் என்று ஊடகங்கள் நேற்று (15) தெரிவித்தன.
பிரிட்டனின் பாதுகாப்பு மன்றம் அதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.
அதன்படி ஐந்து நட்சத்திரங்கள் பெற்று சிறப்புத் தேர்ச்சி பெறும் திட்டங்களுக்குதான் ‘கௌரவ வாள்’ விருது வழங்கப்படும் என்று ராமர் கோயில் கட்டுமானக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனைத்துலக விருது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைந்துள்ள ‘ராம் மந்திர்’ ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பில் அனைத்துலக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரசித்திபெற்ற ‘கௌரவ வாள்’ (Sword of Honour) விருது வழங்கப்பட்டிருப்பதை அதன் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரிப்பேந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தினார் என்று ஊடகங்கள் நேற்று (15) தெரிவித்தன.பிரிட்டனின் பாதுகாப்பு மன்றம் அதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். அதன்படி ஐந்து நட்சத்திரங்கள் பெற்று சிறப்புத் தேர்ச்சி பெறும் திட்டங்களுக்குதான் ‘கௌரவ வாள்’ விருது வழங்கப்படும் என்று ராமர் கோயில் கட்டுமானக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.