• Oct 30 2024

இலங்கையின் முக்கிய வீரரை எச்சரித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை!

Tamil nila / Dec 2nd 2022, 7:56 am
image

Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய (30-11-2022) போட்டியில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) எச்சரித்துள்ளது.



சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதி 2.8இன் படி “சர்வதேச போட்டியில் நடுவரின் முடிவுக்கு வனிந்து ஹசரங்க  ஆட்சேபனை தெரிவித்தல்" என்ற கூற்றிற்கு இணங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.


அதற்காக அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டதுடன், போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50% அபராதம் விதிக்கப்பட்டது.



இந்தப் போட்டியின் போது, ​​திரையில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் விரலை உயர்த்தி நடுவரை எதிர்த்தமைக்காக இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கள நடுவர்களான நிதின் மேனன், லிண்டன் ஹனிபல், மூன்றாவது நடுவர் ரவீந்திர விமலசிறி மற்றும் நான்காவது நடுவர் ருசிர பள்ளியகுருகே ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.



இதன்படி, எமிரேட்ஸ் ஐசிசி போட்டி நடுவர் குழுவின் ரஞ்சன் மடுகல்ல நடத்திய விசாரணையில், ஹசரங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேலதிக விசாரணை எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் முக்கிய வீரரை எச்சரித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய (30-11-2022) போட்டியில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) எச்சரித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதி 2.8இன் படி “சர்வதேச போட்டியில் நடுவரின் முடிவுக்கு வனிந்து ஹசரங்க  ஆட்சேபனை தெரிவித்தல்" என்ற கூற்றிற்கு இணங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.அதற்காக அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டதுடன், போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50% அபராதம் விதிக்கப்பட்டது.இந்தப் போட்டியின் போது, ​​திரையில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் விரலை உயர்த்தி நடுவரை எதிர்த்தமைக்காக இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கள நடுவர்களான நிதின் மேனன், லிண்டன் ஹனிபல், மூன்றாவது நடுவர் ரவீந்திர விமலசிறி மற்றும் நான்காவது நடுவர் ருசிர பள்ளியகுருகே ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.இதன்படி, எமிரேட்ஸ் ஐசிசி போட்டி நடுவர் குழுவின் ரஞ்சன் மடுகல்ல நடத்திய விசாரணையில், ஹசரங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேலதிக விசாரணை எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement