• Apr 26 2024

'அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி' யாழில் சர்வதேச மனித உரிமைகள் தினம் முன்னெடுப்பு!

Chithra / Dec 10th 2022, 11:28 am
image

Advertisement


சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது இன்றையதினம் யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.

நிகழ்வானது இரண்டு நிமிட அக வணக்கத்துடன், விருந்தினர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளின் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய பணிப்பாளர் த. கனகராஜ், சட்டத்தரணிகள், சிறுவர்கள் மற்றும் மகளிர் விடயங்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள், யாழ். பொலிஸார், சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



'அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி' யாழில் சர்வதேச மனித உரிமைகள் தினம் முன்னெடுப்பு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது இன்றையதினம் யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.நிகழ்வானது இரண்டு நிமிட அக வணக்கத்துடன், விருந்தினர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளின் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய பணிப்பாளர் த. கனகராஜ், சட்டத்தரணிகள், சிறுவர்கள் மற்றும் மகளிர் விடயங்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள், யாழ். பொலிஸார், சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement