• May 05 2024

வடக்கில் நாடகமும் அரங்கியலும் தேசிய தொழில் தகமை பயிற்சிகள் ஆரம்பம்...!

Sharmi / Apr 25th 2024, 3:49 pm
image

Advertisement

நாடகமும் அரங்கியலும் தேசிய தொழில் தகமை பயிற்சிகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ,வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் நாடக கலைஞர்களின் தொழிற்தகமையினை மேம்படுத்தும் முகமாக செயற்திட்டம் எதிர்வரும் மாதம் முதல் விண்ணப்பதாரிகளை உள்ளீர்க்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.

கணிதம்,விஞ்ஞானம்,வர்த்தகம்,கலை ஆகிய பிரிவுகளை கற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே நாடகமும் அரங்கியலும் உயர் கல்வி  டிப்ளோமாவினை எமது ரவர்கோலினுடாக வழங்கி பூர்த்தி செய்தவர்களுக்கு திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்விமானி பட்டத்தினையும் வழங்கி வருகின்றோம்.

மாணவர்களையும் நாடக கலையையும் வளர்கின்ற ஒர் செயற்பாடாகவே நாம் இதனை கருதுகின்றோம்.இரண்டு வருட நாடக கற்கை நெறியினூடாக இதனை வழங்குகின்றோம்.

இந்த கற்கை நெறியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாக  நடிப்பு சார்ந்த தேசிய தொழில் தகைமை 4ஆம் தரத்தினை யாழ்ப்பாணம், வவுனியா , மட்டக்களப்பு
போன்ற பிரதேசங்களில் ஆரம்பிக்கவுள்ளோம்.

மேலும் பிரதேச தமிழ் நாடக கலைஞர்களை வளர்க்கும் முகமாக இந்த செயற்றிட்டம் ஆரம்பமாகவுள்ளது.

தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரம் முதல் 7 ஆம் தரம் (NVQ 4-NVQ 7)வழங்க தீர்மானித்துள்ளோம்.விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை இல்லை  எந்த வயது பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.

இந்த கற்கை நெறியின் சிறப்பம்சம் மேடைக்கான நடிப்பு ,கமரா நடிப்பு என்பனவற்றை விருத்தி செய்தல் ஆகும்.

கமரா நடிப்பில் பிரதானமாக ,தொலைக்காட்சி நடிப்பு ,சினிமா நடிப்பு இரண்டினதும்  மேம்பாடு ஆகும் .

இந்த என்விகியூ செயல் நிலை சார்ந்த பயிற்சி நெறியாக நடக்கவுள்ளது. கிழமைகளில் ஒரு நாளும்  வார இறுதி நாட்களில் ஒரு நாளும் இடம்பெறவுள்ளது.

கடந்த வருடம் நாடக திவிழாவினை நடாத்திய இருந்த ரவர் அரங்க மண்டபம் யாழ் அரங்க திருவிழாவினை இவ்வருடம் நடாத்த தீர்மானித்துள்ளோம்.NVQ கற்கையின் வளவாளர்களாக பாடசாலை ஆசிரியர்கள்,நாடக,விரிவுரையாளர்கள் ,சிங்கள உயர் நாடக வித்தாவான்களும் இடம்பெற்றுள்ளனர்.

நாடகமும் அரங்கியலும் கற்கை தரம் 6 முதல் க.பொ.த உயர்தரம் வரை உள்ளது. கல்வித்துறை சார்ந்து இதன் மூலம் பல்கலைக்கழகத்தினை அடைந்தே தொடர்ந்து நாடக உயர் கற்கை நெறியை தொடர் முடிந்தது.

மாறாக கற்கை சார்ந்து அன்றி சாதாரன ஒரு கலைஞனும் தன்னுடைய தொழில் சார் தகைமைய பூர்த்தி செய்ய இது ஓர் அத்தியாயமாக அமைகின்றது. 

ஆகையால் இந்த கற்கை நெறியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுகின்றோம். விண்ணப்பங்களை (Towerhall Foundation) எனும் வலைத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம் பத்திரிகைகளிலும் விண்ப்பம் தொடர்பான  விளம்பரம் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கப்படும்.

பல்கலைக்கழக நாடக பட்டதாரிகளோடு ஒப்பிடுகின்ற பொழுது சாதாரண கலைஞர்களை கூட தொழில் தகைமை சான்றிதழை பெறுகின்றவர்களாக இது மாற்றியைமக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் நாடகமும் அரங்கியலும் தேசிய தொழில் தகமை பயிற்சிகள் ஆரம்பம். நாடகமும் அரங்கியலும் தேசிய தொழில் தகமை பயிற்சிகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ,வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் நாடக கலைஞர்களின் தொழிற்தகமையினை மேம்படுத்தும் முகமாக செயற்திட்டம் எதிர்வரும் மாதம் முதல் விண்ணப்பதாரிகளை உள்ளீர்க்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.கணிதம்,விஞ்ஞானம்,வர்த்தகம்,கலை ஆகிய பிரிவுகளை கற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே நாடகமும் அரங்கியலும் உயர் கல்வி  டிப்ளோமாவினை எமது ரவர்கோலினுடாக வழங்கி பூர்த்தி செய்தவர்களுக்கு திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்விமானி பட்டத்தினையும் வழங்கி வருகின்றோம்.மாணவர்களையும் நாடக கலையையும் வளர்கின்ற ஒர் செயற்பாடாகவே நாம் இதனை கருதுகின்றோம்.இரண்டு வருட நாடக கற்கை நெறியினூடாக இதனை வழங்குகின்றோம்.இந்த கற்கை நெறியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாக  நடிப்பு சார்ந்த தேசிய தொழில் தகைமை 4ஆம் தரத்தினை யாழ்ப்பாணம், வவுனியா , மட்டக்களப்புபோன்ற பிரதேசங்களில் ஆரம்பிக்கவுள்ளோம்.மேலும் பிரதேச தமிழ் நாடக கலைஞர்களை வளர்க்கும் முகமாக இந்த செயற்றிட்டம் ஆரம்பமாகவுள்ளது.தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரம் முதல் 7 ஆம் தரம் (NVQ 4-NVQ 7)வழங்க தீர்மானித்துள்ளோம்.விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை இல்லை  எந்த வயது பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.இந்த கற்கை நெறியின் சிறப்பம்சம் மேடைக்கான நடிப்பு ,கமரா நடிப்பு என்பனவற்றை விருத்தி செய்தல் ஆகும்.கமரா நடிப்பில் பிரதானமாக ,தொலைக்காட்சி நடிப்பு ,சினிமா நடிப்பு இரண்டினதும்  மேம்பாடு ஆகும் .இந்த என்விகியூ செயல் நிலை சார்ந்த பயிற்சி நெறியாக நடக்கவுள்ளது. கிழமைகளில் ஒரு நாளும்  வார இறுதி நாட்களில் ஒரு நாளும் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் நாடக திவிழாவினை நடாத்திய இருந்த ரவர் அரங்க மண்டபம் யாழ் அரங்க திருவிழாவினை இவ்வருடம் நடாத்த தீர்மானித்துள்ளோம்.NVQ கற்கையின் வளவாளர்களாக பாடசாலை ஆசிரியர்கள்,நாடக,விரிவுரையாளர்கள் ,சிங்கள உயர் நாடக வித்தாவான்களும் இடம்பெற்றுள்ளனர்.நாடகமும் அரங்கியலும் கற்கை தரம் 6 முதல் க.பொ.த உயர்தரம் வரை உள்ளது. கல்வித்துறை சார்ந்து இதன் மூலம் பல்கலைக்கழகத்தினை அடைந்தே தொடர்ந்து நாடக உயர் கற்கை நெறியை தொடர் முடிந்தது.மாறாக கற்கை சார்ந்து அன்றி சாதாரன ஒரு கலைஞனும் தன்னுடைய தொழில் சார் தகைமைய பூர்த்தி செய்ய இது ஓர் அத்தியாயமாக அமைகின்றது. ஆகையால் இந்த கற்கை நெறியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுகின்றோம். விண்ணப்பங்களை (Towerhall Foundation) எனும் வலைத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம் பத்திரிகைகளிலும் விண்ப்பம் தொடர்பான  விளம்பரம் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கப்படும்.பல்கலைக்கழக நாடக பட்டதாரிகளோடு ஒப்பிடுகின்ற பொழுது சாதாரண கலைஞர்களை கூட தொழில் தகைமை சான்றிதழை பெறுகின்றவர்களாக இது மாற்றியைமக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement