• May 03 2024

சர்வதேசத்தின் அழுத்தமே தமிழரின் பக்கம் ரணிலின் பார்வை திரும்பக் காரணம்- யோதிலிங்கம் தெரிவிப்பு!

Sharmi / Dec 12th 2022, 5:31 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்  தமிழ் தரப்புக்கும் இடையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தை ஒரு நாடகம் .இதில் அவர் ஒரு வலைப்பின்னலை போட இருக்கிறார்  ,ஆகவே தமிழ் தரப்பு இதற்குள் மாட்டாது மிகவும் கவனமாக அணுகி ஒரு தீர்வினை பெற வேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றத்தில்  அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்களையும் ,இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.இது ஒரு நாடகமாக இருக்க கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது. சர்வதேசம் கொடுத்த தொடர்ச்சியான அழுத்தமே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தமே  காரணமாகும்.

இந்த பேச்சுவார்த்தை அரசுக்கும் ,தமிழ் தேசிய தரப்புக்கும் இடையிலானதாகத்தான்  இருந்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து தரப்புக்களையும் இவர் அழைக்க வேண்டிய நிலைமை தான் இன்று காணப்படுகிறது.இதனை ஒரு சர்வகட்சி மாநாடு என்று சொல்லிக்கொள்ளலாம்.காலத்தை கடத்துவதற்காகவும் ,தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை நீர்த்து போக செய்வதற்காக தான் இவர்கள் சர்வகட் சி மாநாடுகளையும் ,தெரிவுக்குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதனை வரலாற்றில் கண்டிருக்கிறோம்.

இந்த தடவையும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா?என்கின்ற ஒரு சந்தேகம் வந்திருக்கிறது.ஜனாதிபதி அரசுக்கு இருக்கிற பொறுப்பினை முழுப்பேரினதும் தலையில் கட்டி விடுகின்ற ஒரு நிலைமை உருவாகி இருக்கின்றது.தமிழ் தேசியத்துக்கு எதிராக இருக்கின்ற கட்சிகள் கூட இந்த பேச்சுவார்த்தைக்கு வரப்போகின்றது. ஆகவே இதற்குள் எவ்வாறு தமிழ் தரப்பு தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டினை உறுதியாக முன் வைக்கலாம் என்ற கேள்வி வருகின்றது.

சமஸ்டித் தீர்வுக்கு அவர்கள் தயார் என்றால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை எடுத்து இருக்கின்றனர் ,இல்லையேல் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர். ஆகவே இந்த நிலைமை தமிழ் மக்களுக்கு எவ்வளவு தூரம் சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது.பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனில் தமிழ் மக்கள் மீது சர்வதேச மத்தியில் ரணில் குற்றம் சாட்டக்கூடிய நிலைமை உருவாக இடமுண்டு.

இந்த பேச்சுவார்த்தையினை தமிழ் தரப்பு மிக கவனமாக அணுக வேண்டும் .எங்களுக்கு என்ன வேண்டுமோ அது தான் தீர்மானம் .அதற்கு பிறகு தொடர்ந்து இவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடாது .அப்படி நடத்துவதாக இருந்தால் அரசு தரப்பும்,தமிழ் தரப்பும் மட்டும் தான் பேச வேண்டும் .எனைய ஆக்கள் பேச கூடாது .இது கட்டம் கட்டம் ஆக இருக்க வேண்டும் ,தமிழ் ம்மக்களுக்கு நம்பிக்கை வரும் அளவிற்கு அரசு செயற்பட வேண்டும். இதில் அரசு முதலில் நல்லெண்ணத்தை காட்ட வேண்டும் .

அடுத்து சம்ஸ்டியை ஏற்றுக்கொள்ள வேண்டும் ,தமிழ் மக்களை ஒரு  தேசமாக அங்கீகரிக்க வேண்டும் ,அவர்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் ,சுயநிர்ணயத்தை அங்கீகரிக்க வேண்டும் .அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொறிமுறையாக  சம்ஸ்டியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆகவே இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்பு கவனமாக அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.என்றார்.

சர்வதேசத்தின் அழுத்தமே தமிழரின் பக்கம் ரணிலின் பார்வை திரும்பக் காரணம்- யோதிலிங்கம் தெரிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்  தமிழ் தரப்புக்கும் இடையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற பேச்சுவார்த்தை ஒரு நாடகம் .இதில் அவர் ஒரு வலைப்பின்னலை போட இருக்கிறார்  ,ஆகவே தமிழ் தரப்பு இதற்குள் மாட்டாது மிகவும் கவனமாக அணுகி ஒரு தீர்வினை பெற வேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றத்தில்  அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்களையும் ,இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.இது ஒரு நாடகமாக இருக்க கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது. சர்வதேசம் கொடுத்த தொடர்ச்சியான அழுத்தமே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தமே  காரணமாகும்.இந்த பேச்சுவார்த்தை அரசுக்கும் ,தமிழ் தேசிய தரப்புக்கும் இடையிலானதாகத்தான்  இருந்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து தரப்புக்களையும் இவர் அழைக்க வேண்டிய நிலைமை தான் இன்று காணப்படுகிறது.இதனை ஒரு சர்வகட்சி மாநாடு என்று சொல்லிக்கொள்ளலாம்.காலத்தை கடத்துவதற்காகவும் ,தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை நீர்த்து போக செய்வதற்காக தான் இவர்கள் சர்வகட் சி மாநாடுகளையும் ,தெரிவுக்குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதனை வரலாற்றில் கண்டிருக்கிறோம்.இந்த தடவையும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதாஎன்கின்ற ஒரு சந்தேகம் வந்திருக்கிறது.ஜனாதிபதி அரசுக்கு இருக்கிற பொறுப்பினை முழுப்பேரினதும் தலையில் கட்டி விடுகின்ற ஒரு நிலைமை உருவாகி இருக்கின்றது.தமிழ் தேசியத்துக்கு எதிராக இருக்கின்ற கட்சிகள் கூட இந்த பேச்சுவார்த்தைக்கு வரப்போகின்றது. ஆகவே இதற்குள் எவ்வாறு தமிழ் தரப்பு தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டினை உறுதியாக முன் வைக்கலாம் என்ற கேள்வி வருகின்றது.சமஸ்டித் தீர்வுக்கு அவர்கள் தயார் என்றால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை எடுத்து இருக்கின்றனர் ,இல்லையேல் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர். ஆகவே இந்த நிலைமை தமிழ் மக்களுக்கு எவ்வளவு தூரம் சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது.பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனில் தமிழ் மக்கள் மீது சர்வதேச மத்தியில் ரணில் குற்றம் சாட்டக்கூடிய நிலைமை உருவாக இடமுண்டு.இந்த பேச்சுவார்த்தையினை தமிழ் தரப்பு மிக கவனமாக அணுக வேண்டும் .எங்களுக்கு என்ன வேண்டுமோ அது தான் தீர்மானம் .அதற்கு பிறகு தொடர்ந்து இவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடாது .அப்படி நடத்துவதாக இருந்தால் அரசு தரப்பும்,தமிழ் தரப்பும் மட்டும் தான் பேச வேண்டும் .எனைய ஆக்கள் பேச கூடாது .இது கட்டம் கட்டம் ஆக இருக்க வேண்டும் ,தமிழ் ம்மக்களுக்கு நம்பிக்கை வரும் அளவிற்கு அரசு செயற்பட வேண்டும். இதில் அரசு முதலில் நல்லெண்ணத்தை காட்ட வேண்டும் .அடுத்து சம்ஸ்டியை ஏற்றுக்கொள்ள வேண்டும் ,தமிழ் மக்களை ஒரு  தேசமாக அங்கீகரிக்க வேண்டும் ,அவர்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் ,சுயநிர்ணயத்தை அங்கீகரிக்க வேண்டும் .அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொறிமுறையாக  சம்ஸ்டியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆகவே இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்பு கவனமாக அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement