• Nov 24 2024

காணாமல் போன அரச வாகனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

Chithra / Jun 5th 2024, 12:34 pm
image


காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது.

இந் நிலையிலேயே காணாமற்போன வாகனங்களை அடையாளங்காண்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்களும் காணாமல் போன வாகனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், 

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வு அறிக்கையின்படி, சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 கார்கள் மற்றும் 1,115 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1,794 வாகனங்கள் காணாமல் போயுள்ளன.  

காணாமல் போன அரச வாகனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது.கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது.இந் நிலையிலேயே காணாமற்போன வாகனங்களை அடையாளங்காண்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்களும் காணாமல் போன வாகனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வு அறிக்கையின்படி, சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 கார்கள் மற்றும் 1,115 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1,794 வாகனங்கள் காணாமல் போயுள்ளன.  

Advertisement

Advertisement

Advertisement