இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது வேறு எவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது வரையில் யாருக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கத்தரப்பு தெரிவிக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகள் பதவி காலத்தில் மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது வேறு எவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் தற்போது வரையில் யாருக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கத்தரப்பு தெரிவிக்கவில்லை.