• Apr 17 2026

அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! ஈரானின் கடற்படை கப்பல்கள் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் எச்சரிக்கை

Chithra / Mar 2nd 2026, 8:16 am
image

 

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவற்படை  தெரிவித்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தத் தாக்குதல்களின் பின்னர் குறித்த கப்பல்கள் தீப்பிடித்து எரிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தனது நாளாந்த அறிக்கையில், குறித்த கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


இனந்தெரியாத தாக்குதல்களினால் இரண்டு கப்பல்களில் தீ பரவியுள்ளதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அந்தக் கப்பல்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை ஈரானிய ஏவுகணைகளால் USS ஆபிரகாம் லிங்கன் தாக்கப்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) அறிவித்துள்ளது. 


ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் USS ஆபிரகாம் விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாகக் கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.


இந்நிலையில், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அருகில் கூட வரவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூறுகிறது.


மேலும் "ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கான இடைவிடாத பிரசாரத்திற்கு" ஆதரவாக ஆபிரகாம் லிங்கன் கப்பல் தொடர்ந்து விமானங்களை ஏவுகிறது என்றும் கூறுகிறது.


இந்நிலையில் 

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானின் ஒன்பது கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அழிக்கப்பட்ட கப்பல்களில் சில அளவில் பெரியவை மற்றும் இராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ஈரானிய கடற்படையின் தலைமை அலுவலகத்தை அமெரிக்க இராணுவம் பெருமளவில் அழித்துவிட்டதாகவும், ஈரானின் எஞ்சிய கடற்படைக் கப்பல்களையும் தேடி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.விரைவில் அவையும் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ஈரானின் கடற்படை கப்பல்கள் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் எச்சரிக்கை  அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவற்படை  தெரிவித்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்தத் தாக்குதல்களின் பின்னர் குறித்த கப்பல்கள் தீப்பிடித்து எரிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தனது நாளாந்த அறிக்கையில், குறித்த கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.இனந்தெரியாத தாக்குதல்களினால் இரண்டு கப்பல்களில் தீ பரவியுள்ளதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அந்தக் கப்பல்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை ஈரானிய ஏவுகணைகளால் USS ஆபிரகாம் லிங்கன் தாக்கப்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) அறிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் USS ஆபிரகாம் விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாகக் கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.இந்நிலையில், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அருகில் கூட வரவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூறுகிறது.மேலும் "ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கான இடைவிடாத பிரசாரத்திற்கு" ஆதரவாக ஆபிரகாம் லிங்கன் கப்பல் தொடர்ந்து விமானங்களை ஏவுகிறது என்றும் கூறுகிறது.இந்நிலையில் மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானின் ஒன்பது கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அழிக்கப்பட்ட கப்பல்களில் சில அளவில் பெரியவை மற்றும் இராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஈரானிய கடற்படையின் தலைமை அலுவலகத்தை அமெரிக்க இராணுவம் பெருமளவில் அழித்துவிட்டதாகவும், ஈரானின் எஞ்சிய கடற்படைக் கப்பல்களையும் தேடி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.விரைவில் அவையும் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement