• Apr 26 2026

QR முறை மீண்டும் வருமா? எரிபொருள் இருப்பு குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

Chithra / Mar 2nd 2026, 8:10 am
image


மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர்  முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

தேவையற்ற அச்சம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகளவு எரிபொருளைச் சேகரித்தால், அது விநியோகச் செயற்பாடுகளைப் பாதிக்கும். செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புடன் செயல்படுமாறும் பிரதி அமைச்சர்  மக்களை வலியுறுத்தியுள்ளார்.

QR முறை மீண்டும் வருமா எரிபொருள் இருப்பு குறித்து பிரதி அமைச்சர் விளக்கம் மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர்  முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.தேவையற்ற அச்சம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகளவு எரிபொருளைச் சேகரித்தால், அது விநியோகச் செயற்பாடுகளைப் பாதிக்கும். செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புடன் செயல்படுமாறும் பிரதி அமைச்சர்  மக்களை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement