• Sep 29 2024

மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது தேர்தல் அவசியமா? வீ.ஆனந்தசங்கரி கேள்வி SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 3:25 pm
image

Advertisement

நாட்டில் மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது உள்ளூராட்சி தேர்தல் அவசியமா? தேர்தல் பிற்போடப்படவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் ஊடக சந்திப்பு அவரது  கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று 23.02.2023 நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது உள்ளூராட்சி தேர்தல் அவசியமா? தேர்தல் பிற்போடப்படவேண்டும்.

இப்போது நடத்த வேண்டிய தேர்தல் பாராளுமன்ற தேர்தல். நீதியான தேர்தல் நடாத்தப்படவேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை பொருத்தம்  இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய நிலைமையைப் பார்த்தால் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை.  தேர்தலை நடாத்த வேண்டும் என்று பாராளுமன்றில் போராடுபவர்கள் ஏன் பாராளுமன்றத்தை கலைக்குமாறு போராடவில்லை?.

விடுதலைப்புலிகள் இறங்கி வந்து, ஒரு அமைப்பை உருவாக்குமாறும், உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துமாறு கேட்டிருந்தனர். ஏனைய ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு என்னிடம் கேட்டிருந்தார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள், இப்பொழுது உயிருடன் இருப்பதாக பொய் கூறுகின்றனர்.

பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள், பிரபாகரனுக்கும் துரோகம் செய்து எங்களுக்கும் துரோகம் செய்கின்றனர்.என்றார்.


மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது தேர்தல் அவசியமா வீ.ஆனந்தசங்கரி கேள்வி SamugamMedia நாட்டில் மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது உள்ளூராட்சி தேர்தல் அவசியமா தேர்தல் பிற்போடப்படவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் ஊடக சந்திப்பு அவரது  கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று 23.02.2023 நடைபெற்றது.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது உள்ளூராட்சி தேர்தல் அவசியமா தேர்தல் பிற்போடப்படவேண்டும்.இப்போது நடத்த வேண்டிய தேர்தல் பாராளுமன்ற தேர்தல். நீதியான தேர்தல் நடாத்தப்படவேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை பொருத்தம்  இல்லாதவர்களாக இருக்கின்றனர்.இன்றைய நிலைமையைப் பார்த்தால் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை.  தேர்தலை நடாத்த வேண்டும் என்று பாராளுமன்றில் போராடுபவர்கள் ஏன் பாராளுமன்றத்தை கலைக்குமாறு போராடவில்லை.விடுதலைப்புலிகள் இறங்கி வந்து, ஒரு அமைப்பை உருவாக்குமாறும், உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துமாறு கேட்டிருந்தனர். ஏனைய ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு என்னிடம் கேட்டிருந்தார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள், இப்பொழுது உயிருடன் இருப்பதாக பொய் கூறுகின்றனர்.பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள், பிரபாகரனுக்கும் துரோகம் செய்து எங்களுக்கும் துரோகம் செய்கின்றனர்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement