• Jun 01 2024

உணவு பற்றாக்குறையிலும், வெளிநாட்டு உதவிகளை நிராகரிக்கும் வடகொரிய அரசு! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 3:20 pm
image

Advertisement

வடகொரியாவில் வெளிநாட்டு உதவிகளை நிராகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 


கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும் நாடுகளின் வரிசையில் முதலில் இருப்பது வடகொரியா. அங்கு வெளிநாட்டு கலாச்சாரங்கள், சட்டங்கள் உள் நுழையாத வண்ணம் அதிபர் கிம்ஜொங் உன் ஆட்சி செய்து வருகின்றார். 


அதேநேரம் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நெருக்கடி நிலையில், வடகொரியாவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியது. எல்லைப்பகுதிகளை மூடியதன் மூலம் சீனாவுடனான வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஏவுகணை சோதனைகளும், இதன்காரணமாக மேற்கத்தேய நாடுகள் விதித்துள்ள தடைகளும் பொருளாதார நெருக்கடியில் பாரிய சவாலாக மாறியது. 


அதுமாத்திரம் இல்லாமல் இயற்கை காரணிகள், காலநிலை சீர்குழைவுகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் வடகொரியாவில் கடுமையான பஞ்சம் நிலவுவதாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. 


இந்த சூழ்நிலையில், வெளிநாட்டு உதவிகளை நிராகரிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


வெளிநாட்டு உதவிகளை நச்சு மிட்டாயுடன் ஒப்பிட்டுள்ள வடகொரிய அரசு, நச்சு மிட்டாய்களை ஏற்று உண்பதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிப்பது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது. 


உணவு பற்றாக்குறையிலும், வெளிநாட்டு உதவிகளை நிராகரிக்கும் வடகொரிய அரசு SamugamMedia வடகொரியாவில் வெளிநாட்டு உதவிகளை நிராகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும் நாடுகளின் வரிசையில் முதலில் இருப்பது வடகொரியா. அங்கு வெளிநாட்டு கலாச்சாரங்கள், சட்டங்கள் உள் நுழையாத வண்ணம் அதிபர் கிம்ஜொங் உன் ஆட்சி செய்து வருகின்றார். அதேநேரம் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நெருக்கடி நிலையில், வடகொரியாவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தியது. எல்லைப்பகுதிகளை மூடியதன் மூலம் சீனாவுடனான வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஏவுகணை சோதனைகளும், இதன்காரணமாக மேற்கத்தேய நாடுகள் விதித்துள்ள தடைகளும் பொருளாதார நெருக்கடியில் பாரிய சவாலாக மாறியது. அதுமாத்திரம் இல்லாமல் இயற்கை காரணிகள், காலநிலை சீர்குழைவுகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் வடகொரியாவில் கடுமையான பஞ்சம் நிலவுவதாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், வெளிநாட்டு உதவிகளை நிராகரிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உதவிகளை நச்சு மிட்டாயுடன் ஒப்பிட்டுள்ள வடகொரிய அரசு, நச்சு மிட்டாய்களை ஏற்று உண்பதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிப்பது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement