• Mar 31 2025

அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்...!

Sharmi / Jun 1st 2024, 4:19 pm
image

அமெரிக்காவில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாகிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் நேற்றையதினம் அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்தின், மினியாபொலிஸ் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்றது.

அடுக்குமாடிக் குடியிருப்பில் இனந்தெரியாத நபரொருவர் திடீரென  அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட  நிலையில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறித்த நபரும் உயிரிழந்தார்.
 
இந்நிலையில் குறித்த சம்பவங்களால் துப்பாக்கிதாரி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம். அமெரிக்காவில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாகிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் நேற்றையதினம் அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்தின், மினியாபொலிஸ் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்றது.அடுக்குமாடிக் குடியிருப்பில் இனந்தெரியாத நபரொருவர் திடீரென  அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட  நிலையில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறித்த நபரும் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த சம்பவங்களால் துப்பாக்கிதாரி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now