• Mar 31 2025

யாழில் அதிசயமா..? கரையொதுங்கிய புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்....! - பார்வையிட்டுவரும் மக்கள்

Chithra / Jan 8th 2024, 7:36 pm
image



யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை ஒதுங்கியுள்ளது.

இதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கி வருகின்றது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது.

மேலும் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.

மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது..


யாழில் அதிசயமா. கரையொதுங்கிய புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம். - பார்வையிட்டுவரும் மக்கள் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை ஒதுங்கியுள்ளது.இதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கி வருகின்றது.யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது.மேலும் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement