சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் வாகன விபத்து தொடர்பான காணொளி பதிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று (29) அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு சம்பவம் இடம்பெறும் போது அதனை காணொளியாக பதிவு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாகவும், ஆனால் அது தமக்கு பாதகமாக அமையும் என ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை வீடியோவாக எடுக்க முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை கூட மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம் விபத்துக்குள்ளான போது, வாகனத்தில் கமெராவை பயன்படுத்திய நபருக்கு வீடியோ எடுக்க அனுமதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையா பொலிஸார் விளக்கம் சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் வாகன விபத்து தொடர்பான காணொளி பதிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று (29) அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஒரு சம்பவம் இடம்பெறும் போது அதனை காணொளியாக பதிவு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாகவும், ஆனால் அது தமக்கு பாதகமாக அமையும் என ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை வீடியோவாக எடுக்க முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை கூட மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம் விபத்துக்குள்ளான போது, வாகனத்தில் கமெராவை பயன்படுத்திய நபருக்கு வீடியோ எடுக்க அனுமதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.