• Apr 28 2024

பாகிஸ்தான், இலங்கை வழியில் செல்கிறதா?

Chithra / Jan 9th 2023, 8:18 pm
image

Advertisement

பாகிஸ்தான் இலங்கை வழியில் செல்கிறதா? என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று இரண்டு வெளிநாட்டு வணிக வங்கிகளுக்கு சுமார் 1 பில்லியன் டொலர்களை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்தியது.

எனினும், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளதாக இந்தியா நரேட்டிவ் என்ற செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் இஸ்லாமாபாத் 8 பில்லியன் டொலர்களுக்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டும்.

எனினும், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 4.5 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.

இது ஒரு மாதத்திற்கு கூட நாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி செய்வதற்கு போதுமான நிதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் போலவே, நிதிகளின் மொத்த தவறான மேலாண்மை மற்றும் பல ஆண்டுகளாக தவறான முன்னுரிமைகள் அதன் பொருளாதார நிலைமையை மோசமாக்கியுள்ளன.

பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஒப் டெவலப்மென்ட் எகனோமிக்ஸ், நடத்திய ஆய்வில், பாகிஸ்தானியர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இளைஞர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாகிஸ்தான் இலங்கை வழியில் செல்கிறதா? என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை வழியில் செல்கிறதா பாகிஸ்தான் இலங்கை வழியில் செல்கிறதா என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமையன்று இரண்டு வெளிநாட்டு வணிக வங்கிகளுக்கு சுமார் 1 பில்லியன் டொலர்களை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்தியது.எனினும், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளதாக இந்தியா நரேட்டிவ் என்ற செய்தித்தளம் தெரிவித்துள்ளது.அடுத்த மூன்று மாதங்களில் இஸ்லாமாபாத் 8 பில்லியன் டொலர்களுக்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டும்.எனினும், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 4.5 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.இது ஒரு மாதத்திற்கு கூட நாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி செய்வதற்கு போதுமான நிதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையைப் போலவே, நிதிகளின் மொத்த தவறான மேலாண்மை மற்றும் பல ஆண்டுகளாக தவறான முன்னுரிமைகள் அதன் பொருளாதார நிலைமையை மோசமாக்கியுள்ளன.பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஒப் டெவலப்மென்ட் எகனோமிக்ஸ், நடத்திய ஆய்வில், பாகிஸ்தானியர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இளைஞர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தநிலையில், பாகிஸ்தான் இலங்கை வழியில் செல்கிறதா என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement