• Nov 04 2026

இலங்கையில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறதா? - ரயில் சேவைகளில் பாதிப்பு

Chithra / Nov 3rd 2026, 11:39 am
image


நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, குருநாகல் மற்றும் மஹவ ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


இதனால், குறித்த மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


இதற்கமைய, கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் மஹவ வரையிலும் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனால், தெதுரு ஓயாவின் இருமருங்கிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் ஆற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மறுபுறம், கண்டி மாவட்டத்தின் கலஹா – நில்லம்பை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.


நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வான் கதவு ஊடாக அதிகளவிலான நீர் வெளியேறி வருகின்றது.


அதேவேளை, கலாவாவியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் அதன் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


இதன் ஊடாக வினாடிக்கு 1,422 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கலாவாவியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தம்புலு ஓயா ஊடாக வினாடிக்கு சுமார் 6,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக கலாவாவிக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, கலாவாவியின் நீர் கொள்ளளவு 86,280 ஏக்கர் அடியாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இலங்கையில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறதா - ரயில் சேவைகளில் பாதிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, குருநாகல் மற்றும் மஹவ ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால், குறித்த மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்கமைய, கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் மஹவ வரையிலும் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனால், தெதுரு ஓயாவின் இருமருங்கிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் ஆற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மறுபுறம், கண்டி மாவட்டத்தின் கலஹா – நில்லம்பை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வான் கதவு ஊடாக அதிகளவிலான நீர் வெளியேறி வருகின்றது.அதேவேளை, கலாவாவியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் அதன் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன் ஊடாக வினாடிக்கு 1,422 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலாவாவியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தம்புலு ஓயா ஊடாக வினாடிக்கு சுமார் 6,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக கலாவாவிக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, கலாவாவியின் நீர் கொள்ளளவு 86,280 ஏக்கர் அடியாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement