• Apr 28 2026

தமிழரசின் கட்சி அரசியலுக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை பயன்படுத்த படுகிறதா? உறுப்பினர்கள் விசனம்!

Ziya / Apr 28th 2026, 3:35 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் நேற்றையதினம் காரசாரமான விவாதம், சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன. 


தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமய்யலேயே  முரண் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் காலண்டில் சபையால் என்ன அபிவிருத்தி செய்தீர்கள் என npp உறுப்பினர் கேட்டுள்ளார். 


அதற்கு பதிலளிக்க முடியாது தவிசாளர் திண்டாடிக் கொண்டிருந்தபோது உறுப்பினரால் தனது கேள்விக்கு தவிசாளர் பதில் வழங்க வேண்டும் எண்டு கேட்டுள்ளார்.


சரியான மற்றும் பொருத்தமான பதிலை தவிசாளர் வழங்காத நிலையில்  உறுப்பினரின் கேள்விக்கான பதிலை வழங்காமல் இருப்பதை திசை திருப்ப  உபதவிசாளர் தகாத வார்த்தைகள்,  அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சபை நாகரிகத்தை மீறி நடந்து கொண்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


இதேவேளை சபை அமர்வில் கலந்து கொள்ளச் சென்ற உறுப்பினர் ஒருவரை யாருடைய அனுமதியை பெற்று உள்ளே வந்தீர் என்று வருமான வரிப்  பரிசோதகர் கேள்வி கேட்டூள்ளார்.  இதனாலும்  அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.  வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.


தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜன நாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு,  தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின்  உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கேள்விகளுக்கு தவிசாளர் பதில் வழங்க வேண்டும் என்று விடாப்பிட்டியாக இருந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு கேள்வி  கேட்ட npp  பிரதேச சபை  உறுப்பினரை சபை அமர்விலிருந்து வெளியேற்றுவதற்காக நெல்லியடி போலீசார் வரவழைக்கப்பாட்டிருக்கிறனர்.


கேள்வி கேட்பது தனது  உரிமை என்ற விடயத்தைவ போலீசாருக்கு  சுட்டிக்காட்டிய  என்பிபி  உறுப்பினர். பதிலளிக்க  வேண்டியது தவிசாளர் கடமை என்றும் குறிப்பிட்ட நிலையில்  குறித்த npp  உறுப்பினரின் கருத்தில் நியாயம் இருக்கிறது என்ற அடிப்படையில் சமாதான நடவடிக்கையில் போலீசார்  ஈடுபட்டனர். எந்த  கேள்விகளுக்கும் சரியான  பதில் வழங்காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள்,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்,  தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆகியோர் வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். 

இதே வேளை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் செய்தி சேகரிப்பதற்கு எந்த ஒரு ஊடகவியலாளர்களுக்குமஅனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 


தமிழரசின் கட்சி அரசியலுக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை பயன்படுத்த படுகிறதா உறுப்பினர்கள் விசனம் யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் நேற்றையதினம் காரசாரமான விவாதம், சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமய்யலேயே  முரண் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் காலண்டில் சபையால் என்ன அபிவிருத்தி செய்தீர்கள் என npp உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாது தவிசாளர் திண்டாடிக் கொண்டிருந்தபோது உறுப்பினரால் தனது கேள்விக்கு தவிசாளர் பதில் வழங்க வேண்டும் எண்டு கேட்டுள்ளார்.சரியான மற்றும் பொருத்தமான பதிலை தவிசாளர் வழங்காத நிலையில்  உறுப்பினரின் கேள்விக்கான பதிலை வழங்காமல் இருப்பதை திசை திருப்ப  உபதவிசாளர் தகாத வார்த்தைகள்,  அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சபை நாகரிகத்தை மீறி நடந்து கொண்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.இதேவேளை சபை அமர்வில் கலந்து கொள்ளச் சென்ற உறுப்பினர் ஒருவரை யாருடைய அனுமதியை பெற்று உள்ளே வந்தீர் என்று வருமான வரிப்  பரிசோதகர் கேள்வி கேட்டூள்ளார்.  இதனாலும்  அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.  வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜன நாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு,  தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின்  உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கேள்விகளுக்கு தவிசாளர் பதில் வழங்க வேண்டும் என்று விடாப்பிட்டியாக இருந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு கேள்வி  கேட்ட npp  பிரதேச சபை  உறுப்பினரை சபை அமர்விலிருந்து வெளியேற்றுவதற்காக நெல்லியடி போலீசார் வரவழைக்கப்பாட்டிருக்கிறனர்.கேள்வி கேட்பது தனது  உரிமை என்ற விடயத்தைவ போலீசாருக்கு  சுட்டிக்காட்டிய  என்பிபி  உறுப்பினர். பதிலளிக்க  வேண்டியது தவிசாளர் கடமை என்றும் குறிப்பிட்ட நிலையில்  குறித்த npp  உறுப்பினரின் கருத்தில் நியாயம் இருக்கிறது என்ற அடிப்படையில் சமாதான நடவடிக்கையில் போலீசார்  ஈடுபட்டனர். எந்த  கேள்விகளுக்கும் சரியான  பதில் வழங்காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள்,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்,  தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆகியோர் வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். இதே வேளை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் செய்தி சேகரிப்பதற்கு எந்த ஒரு ஊடகவியலாளர்களுக்குமஅனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement